திருப்பூர்

பின்னலாடைத் தொழிலாளர்களுக்கு விலைவாசி உயர்வுக்கு ஏற்ப போனஸ்: ஏஐடியூசி வலியுறுத்தல்

17th Oct 2021 05:53 PM

ADVERTISEMENT

திருப்பூரில் டைம் ரேட், பீஸ் ரேட் அடிப்படையில் பணியாற்றி வரும் தொழிலாளர்களுக்கு விலைவாசி உயர்வுக்கு ஏற்ப போனஸ் வழங்க வேண்டும் என்று ஏஐடியூசி தொழிற்சங்கம் வலியுறுத்தியுள்ளது. 

திருப்பூரில் பனியன் பேக்டரி லேபர் யூனியன் ஏஐடியூசி சங்கத்தின் பொதுக்குழுக்கூட்டமானது சங்க அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தக்கூட்டத்துக்கு அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் என்.சேகர் தலைமை வகித்தார். இதில், நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் விவரம்: தீபாவளிப் பண்டிகைக்கு இன்னும் சில நாள்கள் மட்டுமே உள்ளது. 

இதையும் படிக்க- 30-70 சதவீதம் வரை வேகமாக பரவும் டெல்டா கரோனா; அதிர்ச்சி தரும் புதிய ஆய்வு முடிவுகள்

ஆகவே, திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனங்களில் டைம் ரேட், பீஸ் ரேட் அடிப்படையில் பணியாற்றி வரும் அனைத்து தொழிலாளர்களுக்கும் விலைவாசி உயர்வுக்கு ஏற்ப கடந்த ஆண்டைக் காட்டிலும் கூடுதல் போனஸ் வழங்க வேண்டும். பின்னலாடைத் தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை அனைத்து நிறுவனங்களிலும் அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 

ADVERTISEMENT

இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் வியாழக்கிழமை (அக்.21) மாநகராட்சி அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்துவதாகவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தக்கூட்டத்தில் பனியன் பேக்டரி லேபர் யூனியன் சங்கத்தின் பொருளாளர் செல்வராஜ், செயலாளர் ஏ.எஸ்.செந்தில்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : tirupur
ADVERTISEMENT
ADVERTISEMENT