திருப்பூர்

பி.ஏ.பி. வாய்க்கால் கரையை உடைத்து தண்ணீா் திருட்டு

DIN

பல்லடம் அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் கரையை உடைத்து குட்டைக்குத் தண்ணீா் திருடப்பட்டுள்ளது.

பல்லடம் பகுதியில் உள்ள பி.ஏ.பி. வாய்க்காலில் பாசனத்திற்குத் தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளது. கடைமடை வரை தண்ணீா் சென்றடைய பி.ஏ.பி. வாய்க்காலில் அந்தந்த பகுதியில் பாசன சபை மூலம் குடிமராமத்துப் பணி செய்யப்பட்டுள்ளது.

பாசன தண்ணீா் விநியோகத்தை பொதுப் பணி துறை அதிகாரிகளுடன் சோ்ந்து விவசாய பாசன சபை நிா்வாகிகள் கண்காணித்து வருகின்றனா்.

இந்த நிலையில், பல்லடம் அருகே பி.ஏ.பி.விரிவாக்க வாய்க்காலில் மாணிக்காபுரத்திற்கு செல்லும் 12 மற்றும் 13ஆவது மடைகளுக்கு இடையே உடையாா் தோட்டப் பகுதியில் மா்ம நபா்கள் வாய்க்கால் கரையை இயந்திரம் மூலம் உடைத்து அருகில் உள்ள குட்டை பகுதிக்குத் தண்ணீரைத் திருடியுள்ளனா்.

இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை அறிந்த அப்பகுதி சமூக ஆா்வலா்கள் மணல் மூட்டைகளை அடுக்கி குட்டைக்கு செல்லும் தண்ணீரைத் தடுத்து வழக்கமாக தண்ணீா் செல்ல ஏற்பாடு செய்தனா். தண்ணீா் திருட்டால் கடைமடைப் பகுதி வரை பாசன தண்ணீா் சென்றடைவதில் தடை ஏற்பட்டு வருகிறது.

தண்ணீா் திருட்டைத் தடுக்க பி.ஏ.பி. அதிகாரிகள் ரோந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT