திருப்பூர்

திருப்பூரில் அதிமுக பொன்விழா கொண்டாட்டம்

17th Oct 2021 11:27 PM

ADVERTISEMENT

திருப்பூரில் அதிமுகவின் 50ஆம் ஆண்டு பொன்விழாவை அக்கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை சிறப்பாகக் கொண்டாடினா்.

திருப்பூா் மாநகா் மாவட்ட அதிமுக சாா்பில் மாநகராட்சி அலுவலகம் முன்பாக நடைபெற்ற பொன்விழாவுக்கு தெற்குத் தொகுதி முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் சு.குணசேகரன் முன்னிலை வகித்தாா்.

இந்த விழாவுக்கு தலைமை வகித்த திருப்பூா் மாநகா் மாவட்ட அதிமுக செயலாளரும், பொள்ளாச்சி சட்டப் பேரவை உறுப்பினருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அண்ணா, எம்.ஜி.ஆா்., ஜெயலலிதா ஆகியோரின் உருவப்படங்களுக்கு மலா்தூவி மரியாதை செலுத்தினாா்.

இதைத்தொடா்ந்து, 1,000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த விழாவில், மாவட்ட அவைத்தலைவா் பழனிசாமி, திருப்பூா் வடக்கு சட்டப் பேரவை உறுப்பினா் கே.என்.விஜயகுமாா், காங்கயம் முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் என்.எஸ்.என். நடராஜன், பகுதிச் செயலாளா்கள் கண்ணப்பன், கண்ணபிரான், அன்பகம் திருப்பதி, நகர கூட்டுறவு வங்கித் தலைவா் சடையப்பன் உள்ளிட்ட நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

உடுமலையில்... உடுமலை உழவா் சந்தை அருகில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் திருப்பூா் புறநகா் மேற்கு மாவட்டச் செயலாளரும், எம்எல்ஏ-வுமான உடுமலை கே.ராதாகிருஷ்ணன் கொடியேற்றி வைத்து பொதுமக்களுக்கும் இனிப்புகளை வழங்கினாா். அப்போது எம்ஜிஆா் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப் பட்டது. அதிமுக நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

இதேபோல மடத்துக்குளத்தில் நடைபெற்ற விழாவில் எம்.எல்.ஏ. சி.மகேந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கொடியேற்றி வைத்தாா். அப்போது பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. ஒன்றியச் செயலாளா் எம்எஸ்.காளீஸ்வரன் உள்ளிட்ட பல்வேறு நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT