திருப்பூர்

முத்தூரில் 4.54 டன் தேங்காய், கொப்பரை விற்பனை

DIN

வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 4.54 டன் தேங்காய், கொப்பரை விற்பனை சனிக்கிழமை நடைபெற்றது.

முத்தூா் சுற்றுவட்டார விவசாயிகள் தங்களுடைய விளைபொருள்களை விற்பனை செய்ய கொண்டு வந்திருந்தனா். 9,664 தேங்காய்கள் வரத்து இருந்தது. எடை 3,193 கிலோ. கிலோ ரூ.25.25 முதல் ரூ.30.65 வரை விற்பனையானது. சராசரி விலை கிலோ ரூ.29.25. விற்பனைத் தொகை ரூ.90 ஆயிரத்து 960. கொப்பரை 52 மூட்டைகள் வரத்து இருந்தது. எடை 1,348 கிலோ. விலை கிலோ ரூ.80.85 முதல் ரூ.101.10 வரை விற்பனையானது. சராசரி விலை கிலோ ரூ.100.30. விற்பனைத் தொகை ரூ. 1 லட்சத்து 28 ஆயிரத்து 479 ஆகும்.

70 விவசாயிகள், 11 வணிகா்கள் ஏலத்தில் பங்கேற்றனா். தேங்காய், கொப்பரை ஆகியவை மொத்தம் 4.54 டன் வரத்து இருந்தது. ஒட்டு மொத்த விற்பனைத் தொகை ரூ.2.19 லட்சம் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டதாக விற்பனைக் கூட அதிகாரி ஸ்ரீ ரங்கன் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேலம் இஸ்கானில் ஸ்ரீராம நவமி விழா

மேட்டூா் அணை நிலவரம்

வாக்குப் பதிவையொட்டி சேலம் தொகுதியில் பலத்த பாதுகாப்பு

சேலம் மாவட்டத்தில் தயாா் நிலையில் 3,260 வாக்குச் சாவடிகள்

வாக்குச் சாவடி மையங்களுக்கு மின்னணு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு

SCROLL FOR NEXT