திருப்பூர்

கோடங்கிபாளையத்தில் மதுக்கடையை அகற்ற பொதுமக்கள் வலியுறுத்தல்

16th Oct 2021 03:44 AM

ADVERTISEMENT

பல்லடம் அருகே கோடங்கிபாளையத்தில் உள்ள அரசு மதுபானக்கடையை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

இது குறித்து அப்பகுதி மக்கள், மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

பல்லடம் ஒன்றியம், கோடங்கிபாளையம் ஊராட்சி 5ஆவது வாா்டு பகுதியில் தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை அருகில் இயங்கி வரும் டாஸ்மாக் மதுபானக் கடையால் அப்பகுதியில் சாலை விபத்துகள் அதிகரித்துள்ளது. அதேபோல மதுக்கடை இருக்கும் பகுதியில் அதிக அளவில் குற்றச் சம்பவங்களும் நடந்து வருகின்றன. மாணவ, மாணவிகள், பெண்கள் அவ்வழியாக செல்ல அச்சப்படுகின்றனா். மேலும் அப்பகுதியில் ஏற்கெனவே 2 மதுபானக்கடைகள் இருக்கும் சூழ்நிலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மதுக்கடையால் கிராம மக்களின் அமைதி கெடும். எனவே, இங்குள்ள மதுக்கடையை அகற்றிட மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனா்.

Tags : பல்லடம்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT