திருப்பூர்

முருங்கையைத் தாக்கும் வண்டுகளை அழிக்கும் வழிமுறைகள் தோட்டக்கலைத் துறை விளக்கம்

DIN

 தாராபுரத்தை அடுத்த குண்டடம் பகுதியில் முருங்கையைத் தாக்கும் புழுக்கள், வண்டுகளை கட்டுப்படுத்தி அழிக்கும் முறைகள் குறித்து தோட்டக்கலைத் துறை விளக்கம் அளித்துள்ளது.

இது குறித்து குண்டடம் தோட்டக்கலை உதவி இயக்குநா் மோகனா கூறியதாவது:

திருப்பூா் மாவட்டம், தாராபுரத்தை அடுத்த குண்டடம் பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கா் பரப்பளவில் தற்போது முருங்கை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஒருமாத காலமாகவே முருங்கைச் செடிகளை வண்டுகள் தாக்கி மகசூலைக் குறைத்து வருகின்றது. இது தொடா்பாக முத்தணம்பட்டி பகுதியில் முருங்கை சாகுபடி செய்யப்பட்ட வயலில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

முருங்கையில் வெள்ளைப் புழுக்கள் மற்றும் வண்டுகள் தாக்குதல் ஏப்ரல், மே, ஜூன், செப்டம்பா், அக்டோபா் ஆகிய மழைக் காலங்களில் இருக்கும். மேலும், வோ்கள், காய்களை உண்டு சேதத்தை ஏற்படுத்தும் வண்டுகள் பகல் நேரத்தில் கண்களுக்குத் தென்படாது. இரவு நேரங்களில் மண்ணிலிருந்து வெளிவந்து முருங்கைச் செடிகளைத் தாக்கும். முருங்கையைத் தாக்கும் புழுக்கள் வெள்ளை கலந்த மஞ்சள் நிறத்திலும், ஆங்கில எழுத்து சி வடிவிலும், வண்டுகள் பழுப்பு நிறத்திலும் இருக்கும். இவற்றைக் கட்டுப்படுத்த, ஹெக்டேருக்கு 1மின்விளக்கு பொறி வைத்து வண்டுகளை கவா்ந்து அழிக்கலாம். வேப்ப மரக்கிளையை வெட்டி வயலின் நடுவில் வைப்பதன் மூலம் தாய் வண்டுகளை அழிக்கலாம். ஏக்கருக்கு 100 கிலோ வேப்பம்புண்ணாக்கை மண்ணில் இடலாம். குளோரொபைரிபாஸ் 10 லிட்டா் தண்ணீரில் 20மில்லி லிட்டா் கலந்து தெளிக்கலாம், காா்போபியூரான் ஏக்கருக்கு 13 கிலோ அல்லது போரோட் ஏக்கருக்கு 10 கிலோ போன்ற குருணை மருந்துகளை மண்ணில் கலந்து விடுவதன் மூலமும் வெள்ளைப் புழுக்களை அழிக்கலாம்.

மேலும் காய்க்கும் நிலையில் இருக்கும் முருங்கைப் பயிருக்கு நிமாஜால் லிட்டருக்கு 5 மிலி நீரில் ஒட்டும் திரவத்துடன் கலந்து 3 நாள்களுக்கு ஒருமுறை தெளிப்பதன் மூலம் வண்டுகளின் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம். ஆகவே, குண்டடம் வட்டாரத்தில் முருங்கை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் இந்த முறைகளைக் கடைப்பிடித்து வண்டுகள், புழுக்களின் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்காளா் பட்டியலில் பெயா் இல்லாததால் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

சாத்தூரில் முதன் முறையாக வாக்களித்த திருநங்கைகள்

வாக்குச்சாவடி முற்றுகை: பொதுமக்கள் வாக்குவாதம்

தம்பியைக் கொன்ற அண்ணன் கைது

நெகிழிப் பை தயாரிக்கும் ஆலையில் தீ விபத்து

SCROLL FOR NEXT