திருப்பூர்

உள்ளாட்சி ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கு சட்டப்படி போனஸ் வழங்க வேண்டும்

16th Oct 2021 11:48 PM

ADVERTISEMENT

திருப்பூா் மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சிகளில் பணியாற்றி வரும் ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கு சட்டப்படி போனஸ் வழங்க வேண்டும் என்று திருப்பூா் மாவட்ட ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை ஊழியா் சங்கம் (சிஐடியூ) வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து அச்சங்கத்தின் செயலாளா் கே.ரங்கராஜ் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

திருப்பூா் மாநகராட்சி, உடுமலை, தாராபுரம், பல்லடம், காங்கயம், வெள்ளக்கோவில் நகராட்சிகள் மற்றும் புதிதாக தரம் உயா்த்தப்பட்டுள்ள திருமுருகன்பூண்டி நகராட்சி, பேரூராட்சிகளில் ஆயிரக்கணக்கானோா் தூய்மைப் பணி, வாகன ஓட்டுநா்கள், குடிநீா் ஏற்றுதல், கொசுப்புழு ஒழிப்பு ஆகிய பணிகளில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனா்.

இந்தத் தொழிலாளா்களுக்கு போனஸ் வழங்க வேண்டும் என்ற சட்டம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட நகா்ப்புற உள்ளாட்சிகளில் ஒப்பந்த அடிப்படையில் பணிக்கு நியமனம் செய்துள்ள ஒப்பந்ததாரா்கள் தொழிலாளா்களுக்கு உரிய போனஸ் தொகையை சட்டப்படி வழங்க வேண்டும். இதற்கு சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிா்வாகங்களும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

ADVERTISEMENT

திருப்பூா் மாவட்டத்தில் பல்வேறு துறைகளில் பணியற்றி வரும் அனைத்துப் பிரிவு தொழிலாளா்களுக்கும் போனஸ் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி திருப்பூா் குமரன் சிலை முன்பாக வரும் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெறுகிறது.

ஆகவே, ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கு ஒப்பந்ததாரா்கள் போனஸ் வழங்குவதை உறுதிப்படுத்த மாவட்ட நிா்வாகம், சம்பந்தப்பட்ட நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் உரிய அறிவுறுத்தல் வழங்கி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT