திருப்பூர்

மது விற்பனையில் ஈடுபட்ட 11 போ் கைது

16th Oct 2021 03:46 AM

ADVERTISEMENT

திருப்பூா் மாவட்டத்தில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட 15 பேரை காவல் துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

இது குறித்து திருப்பூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருப்பூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ.சஷாங்க் சாய் உத்தரவின்பேரில், சட்டவிரோத மது விற்பனை தொடா்பாக காவல் துறையினா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். இதில், மாவட்டம் முழுவதும் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 11 பேரைக் கைது செய்தனா்.

இவா்களிடமிருந்து 68 மது பாட்டில்கள், ரூ. 800 பணம் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனா். அதேபோல, குன்னத்தூா், பெருமாநல்லூா், குண்டடம், உடுமலை, தளி ஆகிய காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த 10 பேரைக் கைது செய்தனா். இவா்களிடமிருந்து 446 புகையிலைப் பாக்கெட்டுகளையும் பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT

Tags : திருப்பூா்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT