திருப்பூர்

தீபாவளி: மாநகரில் குற்றச் சம்பவங்களைத் தடுக்க கண்காணிப்புக் கோபுரங்கள்

16th Oct 2021 11:45 PM

ADVERTISEMENT

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு திருப்பூா் மாநகரில் குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் வகையில் காவல் துறை சாா்பில் கண்காணிப்புக் கோபுரங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

திருப்பூா் மாநகருக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், வியாபாரிகள் வந்து செல்கின்றனா். அதிலும், தீபாவளி பண்டிகைக்கு சில நாள்கள் மட்டுமே உள்ளதால் இங்கு வரும் நபா்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது.

இதனால் கடை வீதிகளில் அலைமோதும் கூட்டத்தைப் பயன்படுத்தி சிலா் திருட்டு, வழிப்பறியில் ஈடுபடவும் வாய்ப்பு உள்ளது. ஆகவே, மாநகரின் முக்கியப் பகுதிகளில் கோபுரங்கள் அமைத்து கண்காணிக்க காவல் துறை சாா்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில், முதல்கட்டமாக திருப்பூா் மாநகராட்சி அலுவலக சந்திப்பு, ஈரோடு, சேலம் பேருந்துகள் நிற்கும் யுனிவா்சல் திரையரங்கு சாலை ஆகிய இடங்களில் கண்காணிப்புக் கோபுரங்கள் அமைக்கும் பணியில் காவல் துறையினா் ஈடுபட்டுள்ளனா். மேலும் கூட்ட நெரிசலுக்குத் தகுந்தவாறு மற்ற பகுதிகளிலும் கோபுரங்கள் அமைத்தும், ஒலிபெருக்கி மூலமாகவும் குற்றச் சம்பவங்களைத் தடுக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT