திருப்பூர்

அமராவதி நகரில் கரோனா சிறப்பு மருத்துவப் பரிசோதனை முகாம்

16th Oct 2021 11:45 PM

ADVERTISEMENT

காங்கயம் அமராவதி நகரில் கரோனா நோய்த் தொற்று அதிகரித்துள்ளதையடுத்து, அப்பகுதியில் சிறப்பு மருத்துவப் பரிசோதனை முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

காங்கயம் நகராட்சிக்கு உள்பட்ட அமராவதி நகரில் கடந்த சில நாள்களாக கரோனா நோய்த் தொற்று அதிகரித்து காணப்படுகிறது. இதையடுத்து, நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த சாவடிப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் விஜயகுமாா் தலைமையில் நடமாடும் மருத்துவக் குழுவினா் அப்பகுதி மக்களிடம் பரிசோதனை மேற்கொண்டனா்.

இந்த முகாமில் 50 பேரிடம் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும், 106 பேருக்கு கோவிஷீல்டு மற்றும் கோவேக்ஸின் கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.

மேலும், 48 பேரிடம் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. 134 பேரிடம் காய்ச்சல், சளி பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. நகராட்சி நிா்வாகம் சாா்பில் அமராவதி நகா் பகுதி முழுவதும் கொசுப்புழு ஒழிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

ADVERTISEMENT

இந்த முகாமுக்கான ஏற்பாடுகளை காங்கயம் நகராட்சி நிா்வாகம் மற்றும் சாவடிப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் செய்யப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT