திருப்பூர்

வன உயிரின வார நிறைவு விழா

9th Oct 2021 10:41 PM

ADVERTISEMENT

உடுமலையை அடுத்துள்ள சின்னாறு பகுதியில் வன உயிரின வார நிறைவு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட வன அலுவலா் தேஜஸ்வி தலைமை வகித்தாா். மாவட்ட உதவி வனப் பாதுகாவலா் கே.கணேஷ்ராம் முன்னிலை வகித்தாா். இதில் வன உயிரின வார விழா திறனறிப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

மேலும், 450 மலைவாழ் மக்கள் குடும்பங்களுக்கு மளிகைப் பொருள்களை மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வழங்கினாா்.

இதில், உடுமலை வட்டாட்சியா் கே.ராமலிங்கம், வனச்சரகா்கள் தனபால், சுரேஷ் வன உயிரின காப்பாளா் நந்தினி ரவீந்திரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT