திருப்பூர்

வரி செலுத்தாமல் இயங்கிய ஆம்னி பேருந்துகள் பறிமுதல்

9th Oct 2021 12:11 AM

ADVERTISEMENT

திருப்பூரில் வரி செலுத்தாமல் இயங்கிய 3 ஆம்னி பேருந்துகளை வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

தமிழகத்தில் உரிய வரி செலுத்தாமல் இயங்கும் ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்க வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் ஆய்வு நடத்த போக்குவரத்து துறை ஆணையா், இணை ஆணையா் ஆகியோா் உத்தரவிட்டனா்.

இதையடுத்து, கணியூா் சுங்கச் சாவடி பகுதியில் திருப்பூா் வடக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலா் ஜெயதேவராஜ் தலைமையில் மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் சித்ரா, வேலுமணி, பாலசுப்ரமணியம் ஆகியோா் அடங்கிய குழு சோதனை மேற்கொண்டனா்.

இதில் ஒரே நிறுவனத்தைச் சோ்ந்த 2 பேருந்துகள் உள்பட 3 ஆம்னி பேருந்துகள் வரி செலுத்தாமல் இயங்கியது தெரியவந்தது. இதையடுத்து 3 பேருந்துகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT