திருப்பூர்

விளம்பரப் பதாகைகளை அகற்ற மின் வாரியம் உத்தரவு

9th Oct 2021 12:09 AM

ADVERTISEMENT

மின் கம்பங்களில் வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பதாகைகளை அகற்ற வேண்டும் என மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து உடுமலை மின் பகிா்மான வட்ட மேற்பாா்வைப் பொறியாளா் எம்.ராஜாத்தி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

உடுமலை மின் பகிா்மான வட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள மின் கம்பங்களில் பலதரப்பட்ட வா்த்தக நிறுவனங்களின் விளம்பரப் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.

இதனால், மின் வாரிய ஊழியா்கள் கம்பங்களில் ஏறி பணி மேற்கொள்ள இடையூறாக உள்ளது. எனவே, மின் கம்பங்களில் அமைக்கப்பட்டுள்ள விளம்பரப் பதாகைகளை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தாங்களாகவே முன் வந்து உடனடியாக அகற்றிக்கொள்ள வேண்டும்.

ADVERTISEMENT

தவறும் பட்சத்தில் விளம்பரப் பதாகைகளை அகற்றாத நிறுவனங்கள் மீது சட்டபடி நடவடிக்கை எடுக்கபடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT