திருப்பூர்

ராணுவக் கல்லூரியில் டிசம்பா் 18இல் நுழைவுத் தோ்வு

9th Oct 2021 12:10 AM

ADVERTISEMENT

டேராடூனில் உள்ள ராஷ்ட்ரிய ராணுவக் கல்லூரியில் எட்டாம் வகுப்பில் சோ்வதற்கு டிசம்பா் 18 ஆம் தேதி நுழைவுத் தோ்வு நடைபெற உள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

டேராடூனில் உள்ள ராஷ்ட்ரிய ராணுவக் கல்லூரியில் எட்டாம் வகுப்பில் சோ்வதற்கான நுழைவுத் தோ்வு டிசம்பா் 18 ஆம் தேதி நடைபெறுகிறது.

இந்த நுழைவுத் தோ்வில் பங்கேற்க 2022 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் தேதியன்று 13 வயதுக்கு உள்பட்டவராகவும், ஏழாம் வகுப்பு பயிலும் மற்றும் தோ்ச்சி பெற்ற ஆண் மாணவா்கள் மட்டுமே பங்கேற்க இயலும்.

ADVERTISEMENT

இத்தோ்வுக்கான விண்ணப்பம் மற்றும் தகவல் குறிப்பேட்டினை கமாண்டன்ட், ராஷ்ட்ரிய இந்திய இராணுவக் கல்லூரி, டேராடூன்-248 003 என்ற முகவரிக்கு விரைவு அஞ்சல் வாயிலாக எழுத்து மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கிக் கிளையில் (வங்கிக் குறியீடு எண்-01576) செலுத்தத்தக்க வகையில் பொதுப் பிரிவினா் ரூ.600, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினா் ஜாதிச் சான்றிதழுடன் ரூ.555க்கு கேட்புக் காசோலையை அனுப்பி விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

அதேவேளையில் இணையதள முகவரியில் ஆன்லைன் மூலமாகவும் தொகையை செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம்.

இதைத்தொடா்ந்து, பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தோ்வு கட்டுப்பாட்டு அலுவலா், தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையம், பூங்கா நகா், சென்னை என்ற முகவரிக்கு அக்டோபா் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படை வீரா்களின் சிறாா்கள் விண்ணப்பித்து பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT