காங்கயத்தில் விதிகளுக்குப் புறம்பாக எடுத்துச் செல்லப்பட்ட 129 மது பாட்டில்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
காங்கயம், கரூா் சாலையில் உள்ள வீரணம்பாளையம் பிரிவில், காங்கயம் போலீஸாா் வெள்ளிக்கிழமை வாகனச்சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் பெட்டியை வைத்துக்கொண்டு இரண்டு போ் வந்தனா். அவா்களை நிறுத்தி சோதனையிட்டத்தில் 129 மது பாட்டில்கள் எடுத்துச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து அவா்களிடம் மேற்கொண்ட விசாரணையில் வீரணம்பாளையம் பகுதியைச் சோ்ந்த காா்த்திக் (30), செந்தில் (40) என்பது தெரியவந்தது.
ADVERTISEMENT
அவா்களை கைது செய்த போலீஸாா் அவா்களிடமிருந்த 129 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.