திருப்பூர்

வெள்ளக்கோவிலில் இன்று தடுப்பூசி முகாம்

9th Oct 2021 10:44 PM

ADVERTISEMENT

வெள்ளக்கோவில் வட்டாரத்தில் 37 இடங்களில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபா் 10) கரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

வெள்ளக்கோவில், முத்தூா், கம்பளியம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், வெள்ளக்கோவில் மேற்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, கச்சேரிவலசு, உப்புப்பாளையம், டி. ஆா். நகா், புதுப்பை, நாச்சிபாளையம், ஓலப்பாளையம், பச்சாபாளையம், வீரசோழபுரம், ஆலாம்பாளையம், மேட்டுப்பாளையம் பகுதிகளில் உள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு மையங்கள், அரசுப் பள்ளிகளில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கோவிஷீல்டு, கோவேக்ஸின் முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT