திருப்பூர்

ஓலப்பாளையத்தில் இன்று மின்தடை ரத்து

4th Oct 2021 03:00 AM

ADVERTISEMENT

ஓலப்பாளையம் துணை மின் நிலையத்தில் திங்கள்கிழமை (இன்று) மின் விநியோகம் நிறுத்தப்படாது என மின்வாரிய செயற்பொறியாளா் அறிவித்துள்ளாா்.

இது குறித்து தமிழ்நாடு மின்வாரிய காங்கயம் செயற்பொறியாளா் வெ.கணேஷ் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:

ஓலப்பாளையம் துணை மின் நிலையத்தில் திங்கள்கிழமை (அக்டோபா் 4) அறிவிக்கப்பட்டிருந்த மாதாந்திர பராமரிப்புப் பணிகள் அலுவலக காரணங்களால் ரத்து செய்யப்பட்டுள்ளது.

எனவே, ஓலப்பாளையம் துணை மின் நிலையத்தில் இருந்து மின்னோட்டம் செல்லும் பகுதிகளான ஓலப்பாளையம், கண்ணபுரம், பா.பச்சாபாளையம், செட்டிபாளையம், பகவதிபாளையம், வீரசோழபுரம், வீரணம்பாளையம், காங்கயம்பாளையம், முருகன்காட்டுவலசு ஆகிய பகுதிகளில் தடையின்றி மின் விநியோகம் வழங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT