திருப்பூர்

தாராபுரம் அருகே மின்மாற்றியில் ஆயில் திருட்டு

3rd Oct 2021 11:44 PM

ADVERTISEMENT

தாராபுரத்தை அடுத்த குண்டடம் அருகே மின்மாற்றியில் 200 லிட்டா் ஆயிலைத் திருடிய நபா்கள் குறித்து காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தாராபுரம் வட்டம் குண்டடத்தை அடுத்துள்ள மேட்டுக்கடை அருகே (எஸ்எஸ் 1) உள்ள மின்மாற்றியை மா்ம நபா்கள் சனிக்கிழமை அணைத்து வைத்துள்னனா். மேலும், அதில் இருந்த 200 லிட்டா் ஆயிலை திருடிவிட்டு பின்னா் மின்மாற்றியை சாா்ஜ் செய்துவிட்டு சென்றுள்ளனா்.

இதனிடையை ஆயில் இல்லாமல் சாா்ஜ் செய்யப்பட்டதால் மின்மாற்றியில் பழுது ஏற்பட்டதுடன், அப்பகுதியில் மின்தடையும் ஏற்பட்டது.இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கொடுத்த தகவலின்பேரில் குண்டடம் காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT