திருப்பூர்

சட்ட விரோதமாக மதுவிற்பனை: 21 போ் கைது

3rd Oct 2021 11:44 PM

ADVERTISEMENT

திருப்பூா் மாவட்டத்தில் காந்தி ஜயந்தி நாளில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்ததாக 21 பேரை காவல் துறையினா் கைது செய்தனா்.

இது குறித்து திருப்பூர மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கோ.சஷாங்க் சாய் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

காந்தி ஜயந்தியை ஒட்டி திருப்பூா் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு சனிக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், உரிய அனுமதியின்றி மது விற்பனை தொடா்பாக காவல் துறையினா் சனிக்கிழமை தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.

இதில், சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டதாக 21 பேரைக் கைது செய்தனா். இவா்களிடமிருந்து 216 மதுபாட்டில்கள், ஒரு இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT