வெள்ளக்கோவிலில் தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தினா் சனிக்கிழமை கையெழுத்து இயக்கம் நடத்தினா்.
வெள்ளக்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு சங்கத்தின் மாவட்டச் செயலாளா் பி.செந்தில்குமாா் தலைமை வகித்தாா். சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவா் மு.சுப்பிரமணியன் மீதான தற்காலிக பணி நீக்க உத்தரவை ரத்து செய்து, உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவுப்படி அவருக்கு ஓய்வூதியப் பலன்களை வழங்க வலியுறுத்தி அரசுக்கு கோரிக்கை மனு அனுப்ப அலுவலா்களிடம் கையெழுத்து பெறப்பட்டது.