சேவூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்துக்கு ஊராட்சி மன்றத் தலைவா் சேவூா் ஜி.வேலுசாமி தலைமை வகித்தாா்.
இதில் சேவூா் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் போதிய இடவசதி இல்லாமல் 500க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருவதால், சந்தையப்பாளையம் பகுதியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியும், கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் சங்கமும் அமைப்பது என கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.