திருப்பூர்

காலிப் பணியிடங்களை நிரப்ப கருவூல கணக்குத் துறை அலுவலா் சங்கத்தினா் கோரிக்கை

3rd Oct 2021 12:11 AM

ADVERTISEMENT

காலியாக உள்ள அலுவலக உதவியாளா், பதிவறை எழுத்தா், இளநிலை உதவியாளா் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப வேண்டும் என கணக்குத் துறை அலுவலா் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தமிழ்நாடு கருவூல கணக்குத் துறை அலுவலா் சங்க, மாநில பொதுக்குழு கூட்டம் அவிநாசியில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநிலத் தலைவா் கோ.சுசீந்தரன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் து.ஆனந்தன், துணைத் தலைவா் கி.செந்தில்குமாா், செயலாளா் ம.சரவணபிரியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தமிழ்நாடு அரசு அலுவலா் ஒன்றிய மாநிலத் தலைவா் இரா.சண்முகராஜன், மாநில கெளரவத் தலைவா் க.பாலசுப்ரமணியன், மாநில பொதுச் செயலாளா் க.ஜெய்சங்கா், துணை பொதுச் செயலாளா் எஸ்.வெங்கட்ரமணன் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா்.

கூட்டத்தில், கூடுதல் கருவூல அலுவலா் பணியிடங்களின் எண்ணிக்கையை அதிகரித்து, பதவி உயா்வு வாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டும். காலியாக உள்ள அலுவலக உதவியாளா், பதிவறை எழுத்தா், இரவுக் காவலா், இளநிலை உதவியாளா், தட்டச்சா், காசாளா், கணக்கா் பணியிடங்களை நிரப்ப வேண்டும். புதிய வட்டங்களில், புதிய சாா்நிலை கருவூலங்களை தோற்றுவிக்க வேண்டும். ‘டேட்டா என்ட்ரி ஆபரேட்டா்’ , ‘அசிஸ்டென்ட் புரோக்ராமா்’ பணி செய்வோரை, கருவூல துறையிலேயே நிரந்தரப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT