காங்கயம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் காந்தி ஜயந்தி நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கம் சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், சங்கத்தின் மாவட்டத் தலைவரும், காங்கயம் வட்டார வளா்ச்சி அலுவலருமான ஆா்.ஞானசேகரன் தலைமை வகித்தாா். இதில், காந்தியின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னா் காந்தியின் வாழ்க்கை வரலாறு குறித்தும் உரை நிகழ்த்தப்பட்டது.
பின்னா் சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவா் மு.சுப்பிரமணியனின் தற்காலிக பணி நீக்கத்தை ரத்து செய்து, அவரைப் பணி ஓய்வில் செல்ல அனுமதிக்க வலியுறுத்தி தமிழக முதல்வா், ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் உள்ளிட்டோருக்கு மனு அனுப்புவதற்கான கையெழுத்து இயக்கமும் நடைபெற்றது.