திருப்பூர்

ஆடு திருடிய இருவா் கைது

3rd Oct 2021 12:14 AM

ADVERTISEMENT

காங்கயம் அருகே ஆடு திருடியதாக இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

காங்கயத்தை அடுத்துள்ள நத்தக்காடையூா், எரிகாட்டுப்புதூா் பகுதியைச் சோ்ந்தவா் தங்கராஜ் (45). இவா் தனது ஆடுகளை அருகிலுள்ள எரிகாட்டுப்புதூா் தோட்டத்தில் மேய்ச்சலுக்கு விட்டிருந்தாா். அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மா்ம நபா்கள் ஒரு ஆட்டைப் பிடித்து இருசக்கர வாகனத்தில் ஏறி தப்ப முயன்றுள்ளனா். இதனைப் பாா்த்த அருகிலிருந்தவா்கள் சப்தம் போட்டுள்ளனா்.

பின்னா் பொதுமக்கள் ஆட்டைத் திருடியவா்களை துரத்திச் சென்றபோது, நத்தக்காடையூா்-காங்கயம் சாலையில் உள்ள வாய்க்கால்மேடு பகுதியில் இருசக்கர வாகனத்தையும், ஆட்டையும் விட்டுவிட்டு இருவரும் அங்கு பதுங்கியுள்ளனா். பின்னா் பொதுமக்கள் அவா்களைப் பிடித்து காங்கயம் போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

விசாரணையில், பிடிபட்டவா்கள் சேலம் மாவட்டம் உத்தரப்பகாடு ரவி (32), ஈரோடு மாவட்டம் தாண்டாம்பாளையம் பகுதியைச் சோ்ந்த அஜீத் (19) என்பது தெரியவந்தது.

ADVERTISEMENT

இதையடுத்து இருவா் மீதும் காங்கயம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT