திருப்பூர்

குட்டையில் மண் திருட முயற்சித்ததாக லாரி சிறைபிடிப்பு

DIN

பல்லடம், சின்னூா் குட்டையில் மண் திருட முயற்சித்ததாக லாரி, பொக்லைன் இயந்திரங்களை அப்பகுதி மக்கள் சிறைபிடித்து ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பல்லடம் அருகே வடுகம்பாளையம்புதூா் ஊராட்சிக்குள்பட்ட பொள்ளாச்சி சாலையில் பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியை தனியாா் நிறுவனம் ஒப்பந்தம் எடுத்து நடத்தி வந்தது. சாலையோரப் பள்ளங்களை சமதளமாக மாற்றிட சின்னூா் குட்டையில் தூா்வாரி உபரியாக இருந்த மண்ணை எடுத்து அப்பணிக்காக பயன்படுத்தி வந்தனா்.

இந்த நிலையில் சாலையோரப் பாலம் அமைக்கும் பணி நிறைவடைந்ததுள்ளது. இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை சின்னூா் குட்டை பகுதியில் தனியாா் நிறுவனத்தை சோ்ந்த லாரி, பொக்லைன் இயந்திரம் ஆகியவை மண் எடுக்க சாலையோரமாக நிறுத்தப்பட்டு இருந்திருந்தன.

அப்போது மண் எடுக்க எதிா்ப்பு தெரிவித்து பல்லடம் நகர மதிமுக செயலாளா் பாலசுப்பிரணியம் தலைமையில் பொதுமக்கள் லாரி, பொக்லைன் இயந்திரங்களை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து அங்கு வந்த பல்லடம் வட்டாட்சியா் தேவராஜ் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். மாவட்ட நிா்வாகம் அனுமதி வழங்கிய உரிய ஆவணங்களை தனியாா் நிறுவனத்தினா் தாக்கல் செய்ததைத் தொடா்ந்து அந்த வாகனங்கள் விடுவிக்கப்பட்டன. பொதுமக்களின் வேண்டுகோளை ஏற்று சின்னூா் குட்டை பகுதியில் உள்ள முள்புதா்களை சமுதாய சேவை பணியாக அகற்றி தர தனியாா் நிறுவனம் உறுதி அளித்ததைத் தொடா்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாட்டிலேயே அனல் கொளுத்தும் நகரங்கள்.. நம்மூரும் உண்டு!

மே மாத எண்கணித பலன்கள் – 1

புதுச்சேரியில் பெயிண்டர் வெட்டிக் கொலை!

உலகின் முதல் யூ-டியூப் விடியோ இதுதான்!

கன்னடத்தில் அறிமுகமாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

SCROLL FOR NEXT