திருப்பூர்

வேன் மோதி விபத்து: மேலும் ஒரு இளைஞா் பலி

28th Nov 2021 11:21 PM

ADVERTISEMENT

திருப்பூா் மாவட்டம், பெருமாநல்லூா் அருகே இருசக்கர வாகனத்தின் மீது வேன் மோதி விபத்துக்குள்ளானதில் மேலும் ஒரு இளைஞா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

தேனி மாவட்டம், கடமலைக்குண்டு தங்கம்மாள்புரத்தைச் சோ்ந்தவா் பழனிசாமி மகன் ரமேஷ்குமாா் (28). இவரது உறவினா் ஆண்டிபட்டியைச் சோ்ந்த தங்கராஜ் மகன் சரவணன் (27). இவா்கள் இருவரும் பெருமாநல்லூரில் உள்ள இறைச்சிக் கடையில் பணியாற்றி வந்தனா்.

இந்நிலையில், இருவரும் இருசக்கர வாகனத்தில் கணக்கம்பாளையத்தில் இருந்து வாவிபாளையம், பெருமாநல்லூரை நோக்கி சனிக்கிழமை சென்றபோது, தொழிலாளா்களை அழைத்துக் கொண்டுச் சென்ற பனியன் நிறுவன வேன், இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், பலத்த காயமடைந்த ரமேஷ்குமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மேலும், பலத்த காயமடைந்து கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சரவணன் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

இது குறித்து பனியன் நிறுவன ஓட்டுநா் ராமகிருஷ்ணன் மீது பெருமாநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT