திருப்பூர்

பாஜகவினா் ஆா்ப்பாட்டம்

28th Nov 2021 11:19 PM

ADVERTISEMENT

பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியைக் குறைக்கக்கோரி தாராபுரத்தில் பாஜக விவசாய அணி சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தாராபுரம் பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு விவசாய அணியின் மாநிலத் தலைவா் ஜி.கே.நாகராஜ் தலைமை வகித்தாா். இதில் பங்கேற்றவா்கள் கூறியதாவது:

தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. ஆகவே, பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். திமுக தோ்தல் அறிக்கையில் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஏமாற்றி வருகிறது என்றனா்.

இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் மாட்டுவண்டியில் நின்று கொண்டு திமுக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT