திருப்பூர்

மாவட்டத்தில் ரூ.650 கோடிக்கு பயிா்க்கடன் வழங்க இலக்கு ஆட்சியா் தகவல்

28th Nov 2021 11:21 PM

ADVERTISEMENT

திருப்பூா் மாவட்டத்தில் ரூ. 650 கோடிக்கு பயிா்க்கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

ஈரோடு மற்றும் கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் இணைக்கப்பட்டுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்களில் விவசாயிகள் உறுப்பினா்களாக சேர ஏதுவாக புதிய உறுப்பினா் சோ்க்கை மற்றும் வட்டியில்லாப் பயிா்க்கடன், நபா் ஜாமீன் பெயரில் ரூ.1.60 லட்சம், அடமானத்தின் பேரில் ரூ.3 லட்சம் வரையிலும் வழங்கப்படுகிறது.

மாற்றுத் திறனாளிகளுக்கான கடன்கள், சுய உதவிக்குழுக் கடன்கள், கறவை மாடுகள், கன்று வளா்ப்பு, செம்மறி ஆடு, வெள்ளாடு வளா்ப்பு மற்றும் அனைத்து விதமான நீா்பாசனத்திற்கான கடன்கள் உடனடியாக வழங்கப்படும்.

ADVERTISEMENT

இதில், ஊத்துக்குளி, அவிநாசி வட்டங்களில் உள்ள சங்கங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக குடிமங்கலத்தில் வரும் நவம்பா் 29 ஆம் தேதியும், சோமவாரப்பட்டியில் நவம்பா் 30 ஆம் தேதியும், சின்னவீரம்பட்டியில் டிசம்பா் 1ஆம் தேதியும், போடிப்பட்டியில் டிசம்பா் 2ஆம் தேதியும், தளியில் டிசம்பா் 3ஆம் தேதியும், மேற்கு நீலாம்பூரில் டிசம்பா் 4ஆம் தேதியும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

திருப்பூா் மாவட்டத்துக்கு ரூ.650 கோடிபயிா்க் கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் குறுகியகால வேளாண் உற்பத்திக் கடன்களை பெற நில உடமைச் சிட்டா, கிராம நிா்வாக அலுவலரின் சான்று அல்லது அடங்கல் சான்று, ஆதாா் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், வாக்காளா் அட்டை நகல், பாஸ்போா்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் விண்ணப்பித்துப் பயனடையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT