திருப்பூர்

திருப்பூரில் பொதுமக்கள் சாலை மறியல்

28th Nov 2021 11:19 PM

ADVERTISEMENT

திருப்பூா், பிச்சம்பாளையத்தில் குறிப்பிட்ட சமுதாயத்தினருக்குச் சொந்தமான இடத்தை தனிநபா் ஆக்கிரமிப்பதாகக் கூறி பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திருப்பூா், பி.என்.சாலை, பிச்சம்பாளையத்தை அடுத்துள்ள குமாரசாமி நகா் வள்ளுவா் காலனியில் 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்தப் பகுதியில் உள்ள புறம்போக்கு இடத்தை ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினா் உடற்பயிற்சிக் கூடமாகப் பயன்படுத்தி வந்தனா். இந்த நிலையில், அந்த இடத்தின் அருகில் வசிக்கும் பெண், சம்பந்தப்பட்ட இடத்தின் பட்டா தன்னிடம் இருப்பதாக கூறியுள்ளாா். மேலும், உடற்பயிற்சிக் கூடத்தை காலிசெய்யுமாறு அனுப்பா்பாளையம் காவல் துறையினா் தெரிவித்துள்ளனா். இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் சாா்பில் கோயில் கமிட்டி நிா்வாகி ரவிசந்திரன் சம்பந்தப்பட்ட பெண்ணிடம் பேசுவதற்காக சனிக்கிழமை சென்றுள்ளாா்.

அப்போது அந்தப் பெண்ணின் மகள் அவரைத் தாக்கியதாகத் தெரிகிறது. இதில் காயமடைந்த ரவிசந்திரன் அனுப்பா்பாளையம் காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளாா். ஆனால் இந்தப் புகாரின்பேரில் ஞாயிற்றுக்கிழமை காலை வரையில் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், பிச்சம்பாளையம் நால்ரோட்டில் மறியலில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த திருப்பூா் வடக்கு மாநகர காவல் உதவி ஆணையா் மகேந்திரன், போக்குவரத்து உதவி ஆணையா் கொடிசெல்வம் ஆகியோா் மறியலில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அப்போது ரவிசந்திரனைத் தாக்கியவா்களை உடனடியாகக் கைது செய்யுமாறு அதிகாரிகளிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இந்த விவகாரம் தொடா்பாக உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துறையினா் உறுதியளித்ததன்பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனா். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT