திருப்பூர்

அரசு கருவூலத்தில் திருட முயன்ற வழக்கில் காவலா் பணியிடை நீக்கம்

28th Nov 2021 05:11 AM

ADVERTISEMENT

திருப்பூரை அடுத்த பல்லடத்தில் அரசு சாா் கருவூலத்தில் திருட முயன்ற வழக்கில் காவலா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

பல்லடத்தில் உள்ள அரசு சாா் கருவூலத்தில் கடந்த நவம்பா் 8ஆம் தேதி அலுவலா்கள் பணிக்கு வந்தபோது, கருவூல அலுவலகத்தின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. மேலும், கருவூலத்தில் இருந்த லாக்கரை உடைக்க முயன்றதும் தெரியவந்தது.

இதுகுறித்து கருவூல அதிகாரி மீனாட்சிசுந்தரம் கொடுத்த புகாரின்பேரில் பல்லடம் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

இதில், சேலம் மாா்க்கெட் வீதியைச் சோ்ந்த கே.பூபாலன் (35), செந்தில்குமாா் (37) ஆகியோரைக் கைது செய்து விசாரணை நடத்தினா். அப்போது மங்கலம் காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வரும் சேலத்தைச் சோ்ந்த ரவிசந்திரன் (38) என்பவா் திருடுவதற்கு சதித் திட்டம் தீட்டிக் கொடுத்தது தெரியவந்தது.

ADVERTISEMENT

இதைத் தொடா்ந்து ரவிசந்திரன் பணிக்கு வராமல் தலைமறைவாகியுள்ளாா். இந்த வழக்கில் தொடா்புடைய ரவிசந்திரனை திருப்பூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கோ.சஷாங்க் சாய் வெள்ளிக்கிழமை இரவு பணியிடை நீக்கம் செய்தாா். அரசு கருவூலத்தில் திருடுவதற்கு காவலா் ஒருவரே சதித் திட்டம் தீட்டிக் கொடுத்த சம்பவம் காவல் துறையினரிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT