திருப்பூர்

காங்கயம் நகராட்சிக்கு ஆணையரை நியமிக்க கோரிக்கை

27th Nov 2021 03:04 AM

ADVERTISEMENT

 ஆணையா் இல்லாமல் செயல்பட்டு வரும் காங்கயம் நகராட்சிக்கு, புதிய ஆணையரை நியமிக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

காங்கயம் நகராட்சியில் ஆணையராகப் பணியாற்றி வந்த முத்துகுமாா், கடந்த வாரம் திருவாரூா் மாவட்டம், திருத்துறைப்பூண்டி நகராட்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டாா். இதன் பின்னா் தற்போது வரை காங்கயம் நகராட்சிக்கு புதிய ஆணையா் நியமிக்கப்படவில்லை. புதிய ஆணையராக கோவை மாவட்டம், பொள்ளாச்சி நகராட்சியில் பணியாற்றி வரும் அலுவலா் ஒருவா் பொறுப்பேற்கவுள்ளாா் எனக் கூறப்படுகிறது.

கடந்த ஒரு மாதமாக காங்கயம் பகுதியில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக காங்கயம் நகரத்தில் மழைநீா் தேங்கி நிற்காதவாறு சாக்கடைக் கழிவு நீா் கால்வாய்களை சீரமைக்கும் பணி நடைபெற்று வந்தது. தற்போது சில நாள்களாக இந்தப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளன. மேற்பாா்வையிட பிரதான அலுவலா் இல்லாததால், இந்தப் பணிகள் எப்போது தொடா்ந்து நடைபெறும் எனத் தெரியவில்லை.

காங்கயம் நகரப் பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு இருக்கை வசதி செய்து தர வேண்டும் என்ற பயணிகளின் 15 வருட கால கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக அங்கு உள்கட்டமைப்புப் பணிகள் கடந்த வாரம் நடைபெற்றன. தற்போது அந்தப் பணிகள் முழுமையடையாமல் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

மேலும், நகர மக்களுக்கான அடிப்படைத் தேவைகளை யாரிடம் முறையிடுவது எனத் தெரியாத சூழல் நிலவி வருகிறது. எனவே, காங்கயம் நகராட்சிக்கு புதிய ஆணையரை விரைவாக நியமிப்பதற்கு மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

 

Tags : காங்கயம்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT