திருப்பூர்

வெள்ளக்கோவிலில் அரசின் சிறப்பு இலவச மருத்துவ முகாம்

27th Nov 2021 03:05 AM

ADVERTISEMENT

வெள்ளக்கோவில் அருகே வெள்ளிக்கிழமை நடைபெற்ற அரசின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு இலவச மருத்துவ முகாமை மாநில செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் துவக்கிவைத்தாா்.

வெள்ளக்கோவில் வட்டாரம், கம்பளியம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் லக்கமநாயக்கன்பட்டியில் நடைபெற்ற இந்த முகாமில் நூற்றுக்கணக்கான ஆண்கள், பெண்கள் பங்கேற்று மருத்துவ ஆலோசனைபெற்றனா்.

வெள்ளக்கோவில் வட்டார மருத்துவ அலுவலா் டாக்டா் ராஜலட்சுமி தலைமையிலான குழுவினா் மருத்துவ சிகிச்சை மேற்கொண்டனா். பொது மருத்துவம், காது, மூக்கு, தொண்டை, பல், இதய நோய், மகப்பேறு சம்பந்தப்பட்ட பாதிப்புகள், கண் பாா்வை குறைபாடு உள்ளிட்ட நோய்களுக்கு பரிசோதனை, சிகிச்சை மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

கரோனா, டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணா்வு செய்யப்பட்டு, நிலவேம்பு குடிநீா் வழங்கப்பட்டது. கா்ப்பிணிகளுக்கு அரசின் இலவச ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்பட்டன.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் ராஜேந்திரன், லக்கமநாயக்கன்பட்டி ஊராட்சித் தலைவா் பழனிசாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

 

 

Tags : வெள்ளக்கோவில்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT