திருப்பூர்

தீரன் சின்னமலை கலைக் கல்லூரி கட்டுமானப் பணி துவக்கம்

27th Nov 2021 03:05 AM

ADVERTISEMENT

அவிநாசி அருகே வஞ்சிபாளையத்தில் சுதந்திரப் போராட்ட வீரா் தீரன் சின்னமலை பெயரில் கலைக் கல்லூரி அமைப்பதற்கான கட்டுமானப் பணி வெள்ளிக்கிழமை துவங்கப்பட்டது.

கொங்கு வேளாளா் அறக்கட்டளை சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, அறக்கட்டளை தலைவா் எஸ்.ராமசாமி தலைமை வகித்தாா். நிா்வாகிகள் பழனிசாமி, பொன்னுசாமி, ரத்னசாமி, சாமிநாதன், கிருஷ்ணன், கோவிந்தசாமி, அப்புக்குட்டி, முத்துசாமி, மோகன் காா்த்திக் உள்பட அறக்கட்டளை நிா்வாகிகள் பங்கேற்றனா்.

மேலும், தீரன் சின்னமலை பெயரில் கல்லூரி அமைக்க அரசாணை வழங்கி அனுமதித்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

 

ADVERTISEMENT

Tags : அவிநாசி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT