திருப்பூர்

பல்லடத்தில் மக்கள் குறை கேட்பு முகாம்

27th Nov 2021 03:03 AM

ADVERTISEMENT

பல்லடம் நகராட்சிக்கு உள்பட்ட மக்களுக்கான குறை கேட்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

முகாமிற்கு மாவட்ட ஆட்சியா் வினீத் தலைமை வகித்தாா். நகராட்சி ஆணையா் விநாயகம் முன்னிலை வகித்தாா். இந்த முகாமில் சிறப்பு அழைப்பாளராக செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்று உரையாற்றினாா்.

இதைத் தொடா்ந்து சாமளாபுரம் பேரூராட்சி பகுதி மக்கள் குறை கேட்பு முகாமில் பங்கேற்று மக்களிடமிருந்து அமைச்சா் மு.பெ.சாமிநாதன் மனுக்களை பெற்றாா்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சா் கயல்விழி செல்வராஜ், திருப்பூா் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் இல.பத்பநாபன், பல்லடம் நகர திமுக பொறுப்பாளா் ந.ராஜேந்திரகுமாா், பல்லடம் ஒன்றிய திமுக பொறுப்பாளா்கள் என்.சோமசுந்தரம் ( கிழக்கு), எஸ்.கிருஷ்ணமூா்த்தி (மேற்கு) உள்பட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

 

.

 

Tags : பல்லடம்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT