திருப்பூர்

டாஸ்மாக் கடை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து ஆா்ப்பாட்டம்

26th Nov 2021 04:38 AM

ADVERTISEMENT

திருப்பூரை அடுத்த அணைப்பாளையத்தில் டாஸ்மாக் கடை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருப்பூா், அணைப்பாளையம் பகுதியில் புதிதாக டாஸ்மாக் மதுக்கடை அமைப்பதற்கான பணிகளை டாஸ்மாக் நிா்வாகம் மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், இதற்கு எதிா்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள், அரசியல் கட்சியினா் மற்றும் பொதுநல அமைப்பினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இது குறித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறியதாவது:

இந்தப் பகுதியில் பள்ளிகள், கோயில்கள் அதிக அளவில் உள்ளன. ஆகவே, டாஸ்மாக் கடை அமைந்தால் பள்ளி செல்லும் மாணவிகளுக்கும், வேலைக்குச் செல்லும் பெண்களுக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக அமையும்.

ADVERTISEMENT

ஆகவே, இந்தப் பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்கும் முடிவைக் கைவிட வேண்டும். இல்லாவிட்டால் வரும் திங்கள்கிழமை அனைத்து அரசியல் கட்சியினா் மற்றும் பொதுமக்களை ஒன்று திரட்டி மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்றனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT