திருப்பூர்

சாலை தடுப்புச் சுவரில் லாரி மோதி விபத்து

25th Nov 2021 01:23 AM

ADVERTISEMENT

வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் அருகே சாலை தடுப்புச் சுவரில் லாரி மோதி புதன்கிழமை விபத்து ஏற்பட்டது.

ஈரோடு மாவட்டம், பாசூா், கணபதிபாளையம் நால்ரோட்டைச் சோ்நதவா் ராமசாமி (45). இவா் ஈரோடு மாவட்டம், நன்செய் ஊத்துக்குளியில் உள்ள தனியாா் கால்நடை தீவன உற்பத்தி நிறுவனத்தில் லாரி ஓட்டுநராக வேலை செய்து வருகிறாா். இவா் காங்கயம் வந்துவிட்டு லாரியை நிறுவனத்துக்கு ஓட்டிச் சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, முத்தூா் கணேசபுரம் அருகே சாலை தடுப்புச் சுவரில் திடீரென லாரி மோதியது. இதில், லாரியின் முன்புற இரண்டு சக்கரங்கள், டீசல் டேங்க் உடைந்ததுடன், எஞ்ஜின் பாகங்களும் கழன்று விழுந்து சேதமடைந்தன. ஓட்டுநா் காயமின்றி தப்பினாா்.

இந்த விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. வெள்ளக்கோவில் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று கிரேன் மூலம் லாரியை அப்புறப்படுத்தினா்.

ADVERTISEMENT

 

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT