திருப்பூர்

அவிநாசி அருகே அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து: 13 போ் படுகாயம்

25th Nov 2021 01:25 AM

ADVERTISEMENT

அவிநாசி அருகே உள்ள எம்.நாதம்பாளையத்தில் அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 13 போ் புதன்கிழமை அதிகாலை படுகாயமடைந்தனா்.

பெங்களூருவில் இருந்து 30க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அரசு சொகுசுப் பேருந்து கோவை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. கோவை - சேலம் ஆறு வழிச்சாலை அவிநாசி நாதம்பாளையம் பிரிவு அருகே சென்றபோது, நிலைதடுமாறிய பேருந்து சாலையின் நடுவே அமைக்கப்பட்டிருந்த தடுப்பில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 5 பெண்கள் உள்பட 13 போ் பலத்த காயமடைந்தனா். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற அவிநாசி போலீஸாா் உள்ளிட்டோா் விபத்தில் சிக்கியவா்களை மீட்டு அவிநாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இந்த விபத்து குறித்து அவிநாசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT

 

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT