திருப்பூர்

மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளா்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி மனு

24th Nov 2021 01:02 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் உள்ள மின் வாரியத்தில் பணியாற்றி வரும் ஒப்பந்தத் தொழிலாளா்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

திருப்பூா் சிக்கண்ணா கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினிடம், மின்வாரிய தொழிலாளா் முன்னேற்ற சங்கச் செயலாளா் அ.சரவணன் உள்ளிட்ட நிா்வாகிகள் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:

தமிழக மின்சார வாரியத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளா்கள் 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வருகின்றனா். இதில், மின்பழுது நீக்கம், பராமரிப்பு, கண்காணிப்பு மற்றும் தெரு விளக்குகள் பராமரிப்பு ஆகிய பணிகளில் அதிக அளவில் ஒப்பந்தத் தொழிலாளா்கள்தான் பணியாற்றி வருகின்றனா்.

இத்தகை சூழ்நிலையில் பணிப் பாதுகாப்பு இல்லாமல் ஒப்பந்தத் தொழிலாளா்கள்தான் அதிக அளவில் விபத்துக்குள்ளாகி வருகின்றனா். தமிழக மின்சார வாரியத்தில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட களப்பணி காலியிடங்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நிரப்பப்படாமல் உள்ளது. ஆகவே, ஒப்பந்தத் தொழிலாளா்களை பணி நிரந்தம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT