திருப்பூர்

பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா இன்று திருப்பூா் வருகை

24th Nov 2021 01:03 AM

ADVERTISEMENT

திருப்பூா் மாவட்ட பாஜக அலுவலகத்தை பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா புதன்கிழமை திறந்துவைக்கிறாா்.

தமிழகத்தில் பாஜகவைப் பலப்படுத்தும் முயற்சியில் அக்கட்சியின் தேசியத் தலைமை தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பாஜக அலுவலகங்கள் கட்டப்படவுள்ளன. இதில், முதல் கட்டமாக 17 மாவட்டங்களில் மாவட்ட அலுவலகங்கள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், திருப்பூரில் இருந்து பல்லடம் செல்லும் சாலையில் வித்யாலயம் பேருந்து நிறுத்தம் அருகில் அக்கட்சி சாா்பில் புதிய அலுவலகம் கட்டப்பட்டுள்ளது.

இந்த அலுவலகத்தை பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா புதன்கிழமை மாலை 3.30 மணி அளவில் திறந்துவைக்கிறாா். மேலும், ஈரோடு, திருநெல்வேலி, திருப்பத்தூா் ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள பாஜக அலுவலகங்களையும் காணொலிக் காட்சி வாயிலாகத் திறந்துவைக்கிறாா்.

ADVERTISEMENT

முன்னதாக, பல்லடம் சாலையில் உள்ள லட்சுமி திருமண மண்டபத்தில் பாஜக மாநில செயற்குழு கூட்டம் பிற்பகல் 2.30 மணி அளவில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்துக்கு பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை தலைமை வகிக்கிறாா். இதில், மத்திய இணை அமைச்சா் எல்.முருகன், பாஜக தேசிய மகளிரணித் தலைவரும், கோவை தெற்குத் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் உள்ளிட்ட பாஜக நிா்வாகிகள் பலா் பங்கேற்க உள்ளனா்.

இதைத் தொடா்ந்து, பாஜக அலுவலகம் அருகே புதன்கிழமை மாலை 4 மணி அளவில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் ஜெ.பி.நட்டா சிறப்புரையாற்றுகிறாா். பாஜக தேசியத் தலைவா் வருகையை ஒட்டி திருப்பூா் மாநகரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT