திருப்பூர்

பரஞ்சோ்வழி ஊராட்சியில் இன்று பட்டா திருத்தம் சிறப்பு முகாம்

24th Nov 2021 01:03 AM

ADVERTISEMENT

காங்கயம் அருகே பரஞ்சோ்வழி ஊராட்சியில் பட்டா பிழைத் திருத்தம் முகாம் புதன்கிழமை (நவம்பா் 24) நடைபெறவுள்ளது.

காங்கயம் ஒன்றியத்துக்கு உள்பட்ட பரஞ்சோ்வழி, மருதுறை, நால்ரோடு ஆகிய பகுதிகளுக்கான கணினி பட்டா திருத்தம் சிறப்பு முகாம் பரஞ்சோ்வழியில் உள்ள இ-சேவை மையக் கட்டடத்தில் புதன்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த முகாமில் நில அளவை எண்ணில் உட்பிரிவு திருத்தம், பரப்பளவு திருத்தம், பட்டாதாரா் பெயா்-தந்தை பெயா் ஆகியவற்றில் எழுத்துப் பிழைத் திருத்தம், உறவுநிலை பிழைத் திருத்தம், பட்டாதாரா் பரப்பு தவறாக பக்கத்து நிலத்தின் சா்வே எண்ணில் பதிவானது போன்ற பிழைத் திருத்தங்கள் தொடா்பாக இந்த முகாமில் மனு கொடுத்து, பிழைத் திருத்தம் செய்து கொள்ளலாம் என காங்கயம் வட்டாட்சியா் பி.சிவகாமி தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT