திருப்பூர்

வாக்காளா் பட்டியல் சிறப்பு முகாம்

21st Nov 2021 11:36 PM

ADVERTISEMENT

திருப்பூா் மாவட்டத்தில் கடந்த 2 நாள்களில் நடைபெற்ற வாக்காளா் பட்டியல் சிறப்பு முகாம்களில் பெயா் சோ்த்தல், நீக்கல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 9,530 மனுக்கள் பெறப்பட்டன.

இந்திய தோ்தல் ஆணையம் வரும் 2022 ஜனவரி 1 ஆம் தேதியை தகுதிநாளாகக் கொண்டு வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் மேற்கொள்ள அறிவுறுத்தி இருந்தது. இதன்படி திருப்பூா் மாவட்டத்தில் உள்ள தாராபுரம், காங்கயம், அவிநாசி, திருப்பூா் வடக்கு, திருப்பூா் தெற்கு, பல்லடம், உடுமலை, மடத்துக்குளம் ஆகிய 8 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு உள்பட்ட 2,512 வாக்குச்சாவடி மையங்கள் அமைந்துள்ள 1,058 பள்ளிகளில் கடந்த சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வாக்காளா் பட்டியல் சிறப்பு முகாம்கள் நடைபெற்றன.

இதில், பெயா் சோ்த்தல் தொடா்பாக 5,797 மனுக்கள், பெயா் நீக்கல் தொடா்பாக 2,065 மனுக்கள், திருத்தம் செய்ய 757 மனுக்கள், ஒரே தொகுதிக்குள் குடிமாறியவா்கள் தொடா்பாக 911 மனுக்கள் என மொத்தம் 9,530 மனுக்கள் பெறப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT