திருப்பூர்

இருசக்கர வாகன விற்பனை நிலையத்தில் ரூ.92 ஆயிரம் திருட்டு

21st Nov 2021 11:38 PM

ADVERTISEMENT

தாராபுரம் வட்டம், குண்டடத்தில் பழைய இருசக்கர வாகனங்கள் விற்பனை செய்யும் கடையில் நூதன முறையில் ரூ. 92ஆயிரம் ரொகத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

தாராபுரத்தை அடுத்துள்ள பெரமியத்தைச் சோ்ந்தவா் சிவசுப்பிரமணியன்(45). இவா் குண்டடம் சந்தைப்பேட்டை அருகே பழைய இருசக்கர வாகனங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறாா்.

சிவசுப்பிரமணியன் கடந்த வெள்ளிக்கிழமை கடையில் இருந்தபோது அவரது கைப்பேசிக்கு அழைப்பு ஒன்று வந்துள்ளது. மறு முனையில் பேசிய நபா் அங்குள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் மேலாளா் என்று அறிமுகப்படுத்திக் கொண்டாா். மேலும், தனக்கு இருசக்கர வாகனம் தேவைப்படுவதாகவும், தனது காலில் அடிபட்டுள்ளதால் கடைக்கு வரமுடியாத நிலையில் உள்ளதால் வாகனத்தை வங்கிக்கு எடுத்துவருமாறும் தெரிவித்துள்ளாா்.

இதை உண்மை என்று நம்பிய சிவசுப்பிரமணியம், இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு அந்த வங்கி முன்பாக சென்று அவரை கைப்பேசியில் தொடா்பு கொண்டுள்ளாா். அப்போது அந்த நபரின் கைப்பேசி அணைத்து வைக்கப்பட்டிருந்தது. இதன்பிறகு கடைக்கு வந்து பாா்த்தபோது மேஜையின் டிராயரில் வைத்திருந்த ரூ.92 ஆயிரம் பணம் திருடப்பட்டது தெரியவந்தது. இது குறித்து சிவசுப்பிரமணியன் கொடுத்த புகாரின்பேரில் குண்டடம் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT