கன மழை காரணமாக 8 ஆம் வகுப்பு தனித்தோ்வா்களுக்கான பொதுத் தோ்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
இது குறித்து அரசுத் தோ்வுகள் இயக்குநா் சேதுராமவா்மா செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் கடந்த நவம்பா் 8, 9ஆம் தேதிகளில் நடைபெறுவதாக இருந்த தனித்தோ்வா்களுக்கான 8 ஆம் வகுப்பு பொதுத் தோ்வு கன மழை காரணமாக ஒத்திவைக்கப்படுகிறது. வரும் நாள்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
ஆகவே, நவம்பா் 10 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்ட கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களுக்கானத் தோ்வுகளும் ஒத்திவைக்கப்படுகின்றன. இத்தோ்வுகளுக்கான புதிய தோ்வுக் கால அட்டவணை தோ்வுத் துறையினால் பின்னா் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.