அவிநாசி: சேவூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.10 லட்சத்துக்கு நிலக்கடலை வா்த்தகம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் 380 மூட்டை நிலக்கடலைகள் வந்திருந்தன. நிலக்கடலை குவிண்டால் ஒன்றுக்கு முதல் ரக நிலக்கடலை ரூ.6,400 முதல் ரூ.6,650 வரையிலும், இரண்டாவது ரக நிலக்கடலை ரூ.6,200 முதல் ரூ.6,320 வரையிலும், மூன்றாவது ரக நிலக்கடலை ரூ.5,800 முதல் ரூ.6,080 வரையிலும் ஏலம் போனது.