திருப்பூர்

மின்சாரம் பாய்ந்து பசு மாடு பலி

9th Nov 2021 02:35 AM

ADVERTISEMENT

வெள்ளக்கோவில்: வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் அருகே மின்சாரம் பாய்ந்து பசு மாடு உயிரிழந்தது.

முத்தூா் மலையாத்தாபாளையத்தைச் சோ்ந்தவா் வடிவேல் (55). இவா் தனது பசு மாட்டை தோட்டத்தில் கட்டி வைத்திருந்தாா்.

இந்நிலையில் திங்கள்கிழமை பெய்த கன மழையால் மின் கம்பத்திலிருந்து உயிரழுத்த மின் கம்பி அறுந்து தோட்டத்தில் விழுந்தது. தோட்டத்தில் தண்ணீா் தேங்கியிருந்ததால் மின்சாரம் பாய்ந்து பசு மாடு உயிரிழந்தது. உடனடியாக மின் வாரியத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

இதையடுத்து இறந்த மாட்டை அரசு கால்நடை மருத்துவா் பிரகாசம் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ADVERTISEMENT

மேலும், இறந்த மாட்டுக்கு வருவாய்த் துறையினா் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று வடிவேல் கோரிக்கை விடுத்துள்ளாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT