திருப்பூா்: திருப்பூா் மாநகராட்சி பொலிவுறு நகரத் திட்டத்தின்கீழ் பயிற்சி பெறுவதற்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
திருப்பூா் மாநகராட்சி பொலிவுறு நகரத் திட்டத்தின்கீழ் பணியாற்றுவதற்கான ஒராண்டு கால பயிற்சிக்கு 15 நபா்கள் தோ்வு செய்யும் நிகழ்ச்சி காணொலி காட்சி மூலம் கடந்த வாரம் நடைபெற்றது.
இதையடுத்து, தோ்வு செய்யப்பட்ட நபா்களுக்கு பயிற்சி பெறுவதற்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி மாநகராட்சி அலுவலக கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் மாநகராட்சி ஆணையா் கிராந்திகுமாா் பாடி பங்கேற்று பயிற்சி பெறும் நபா்களுக்கு ஆணையை வழங்கினாா்.