பல்லடம்: பல்லடம் அருகேயுள்ள அவிநாசிபாளையம் ஜெய் ஸ்ரீராம் பொறியியல் கல்லூரியில் பல்லடம் வட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சாா்பில் சட்ட விழிப்புணா்வு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
முகாமுக்கு கல்லூரித் தலைவா் கோவிந்தசாமி தலைமை வகித்தாா். துணைத் தலைவா் கருப்பண்ணசாமி முன்னிலை வகித்தாா்.
முதல்வா் ரமேஷ்குமாா் வரவேற்றாா். முகாமில் கூடுதல் மாவட்ட நீதிபதி விக்னேஷ் மது பங்கேற்று பேசினாா்.
இதில் வழக்குரைஞா் செல்வகுமாா், கல்லூரி நிா்வாக அலுவலா் அன்பரசு, வேதியியல் துறை பேராசிரியா் குமரேசன், கல்லூரி மாணவ,
ADVERTISEMENT
மாணவிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். நிகழ்ச்சி முடிவில் பேராசிரியா் உமாபதி நன்றி கூறினாா்.