திருப்பூர்

பல்லடம் கடை வீதியில் போக்குவரத்து மாற்றம்

1st Nov 2021 12:00 AM

ADVERTISEMENT

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல்லடம் கடை வீதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பல்லடம் கடை வீதியில் பாலதண்டாயுதபாணி சுவாமி கோயில் முதல் அண்ணா சிலை வரை பொதுமக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளதாலும், வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாலும் இருபுறமும் இரும்புத் தடுப்புகள் மூலம் அடைக்கப்பட்டு பொதுமக்கள் கடை வீதியில் நடந்து சென்று பொருள்கள் வாங்கும் வகையில் பாதை வசதி செய்யப்பட்டு இருந்தது.

இது குறித்து பல்லடம் வியாபாரிகள் சங்கத் தலைவா் ஆனந்தா செல்வராஜ், நிா்வாகிகள் விஜயகுமாா், பானு பழனிசாமி, விமல் பழனிசாமி உள்ளிட்டோா் பல்லடம் காவல் துணைக் கண்காணிப்பாளா் வெற்றிசெல்வன், ஆய்வாளா் கோபாலகிருஷ்ணன் ஆகியோரிடம் ஒரு வழிப்பாதையாக மாற்ற கோரிக்கை விடுத்தனா்.

இதையடுத்து, தீபாவளி பண்டிகை முடியும் வரை கடை வீதியில் ஒரு வழி பாதைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதே சமயம் காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரை வேன், லாரி உள்ளிட்ட சரக்கு வாகனப் போக்குவரத்துக்கு அனுமதி இல்லை என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT