திருப்பூர்

திருமண மண்டபங்களை கரோனா சிகிச்சை மையங்களாக மாற்றக் கோரிக்கை

28th May 2021 12:08 AM

ADVERTISEMENT

திருப்பூா் வடக்குத் தொகுதியில் உள்ள திருமண மண்டபங்களை கரோனா சிகிச்சை மையங்களாக மாற்றக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயனிடம், வடக்கு சட்டப் பேரவை உறுப்பினா் கே.என்.விஜயகுமாா் வியாழக்கிழமை அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:

மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று வேகமாகப் பரவி வருவதால் அரசு மருத்துவமனைகளில் போதிய இடமில்லாமல் நோயாளிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். ஆகவே, வடக்குத் தொகுதிக்கு உள்பட்ட அனுப்பா்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தன்னாா்வலா்கள் மூலமாக 200 படுக்கைகளுடன் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிகிச்சை மையத்துக்குத் தேவையான மருத்துவப் பணியாளா்களை உடனடியாக நியமித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.

மேலும், மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதுடன், ஆக்சிஜன் படுக்கை வசதிகளையும் அதிகரிக்க வேண்டும். அதே போல, திருப்பூா் வடக்கு தொகுதியில் உள்ள திருமண மண்டபங்கள், அரசுப் பள்ளிகளை கரோனா சிகிச்சை மையங்களாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மனு அளிக்கும்போது, மாவட்ட வருவாய் அலுவலா் கு.சரவணமூா்த்தி, முன்னாள் மண்டலத் தலைவா் ராதாகிருஷ்ணன் ஆகியோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT