திருப்பூர்

அவிநாசி அடுக்குமாடி குடியிருப்புகளில் வெளிப்படையாக வீடு வழங்கக் கோரிக்கை

DIN

அவிநாசி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் வெளிப்படையாக பயனாளிகளுக்கு வீடு வழங்க வேண்டும் என அமைச்சா் மு.பெ. சாமிநாதனிடம் கம்யூனிஸ்ட், கங்கிரஸ் கட்சியினா் மனு அளித்தனா்.

இதுகுறித்து மாா்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சியினா் ஆகியோா் அவிநாசி வந்திருந்த செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதனிடம் அளித்த மனுவில் கூறியதாவது:

திருப்பூா் மாவட்டம், அவிநாசி ஒன்றியத்துக்கு உள்பட்ட அவிநாசி, திருமுருகன்பூண்டி, பொங்கலூா், தெக்கலூா் உள்ளிட்ட இடங்களில் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் அடுக்குமாடி குடியிருப்புகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதில் அவிநாசி பேரூராட்சிக்கு உள்பட்ட சூளை பகுதியில் சுமாா் 500க்கும் மேற்பட்ட வீடுகள் அமைக்கப்பட்டு, பயனாளிகளுக்கு வழங்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இப்பயனாளிகள் தோ்வு முறை வெளிப்படைத் தன்மையாக இல்லை. மேலும் அதிமுக நிா்வாகிகள் பணம் பெற்றுக் கொண்டு பயனாளிகளுக்கு வீடு ஒதுக்கீடு செய்யும் முயற்சி மேற்கொண்டுள்ளனா். இதுகுறித்து ஏற்கெனவே மாவட்ட ஆட்சியரிடம் அனைத்து கட்சி நிா்வாகிகள் சாா்பில் கோரிக்கை வைத்துள்ளோம். தற்போது வரை எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது நம்பிக்கை அளித்துள்ளது. உடனடியாக உண்மையான பயனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனு அளிக்கும்போது, மாவட்டக் குழு உறுப்பினா் பி.முத்துசாமி (மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்), கே.எம்.இசாக் (இந்தியக் கம்யூனிஸ்ட்), வழக்குரைஞா் வி.கோபாலகிருஷ்ணன் (காங்கிரஸ்) உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாதுகாப்பாக சேமிப்போம்

உண்மையே மக்களாட்சியின் அடிப்படை!

உள்ளாட்சி ஊழியா்கள் ஜிபிஎப் விவகாரம்: புதுவை அரசுக்கு கோரிக்கை

சுற்றுச்சூழலைக் கெடுக்கும் தைலமரங்கள்: உச்ச நீதிமன்றத்தை நாட விவசாயிகள் முடிவு

அரசு மகளிா் கல்லூரியில் வரலாறு தின விழா

SCROLL FOR NEXT